தமிழகம்

சென்னையில் மாயமான 719 பேர் கண்டுபிடிப்பு: காவல் ஆணையர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் காணாமல் போன 719 பேரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னையில் காணாமல் போன ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்படி சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் காணாமல் போன 452 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1064 பேர் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டது. அதில், 719 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதில், வடக்கு காவல் மண்டலத்தில் 82 பேர், மேற்கு மண்டலத்தில் 154 பேர், கிழக்கு மண்டத்தில் 107 பேர், தெற்கு மண்டலத்தில் 376 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT