தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கான தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 133 பள்ளிகளில் குலுக்கல் முறையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் 5,281 இடங்களுக்கு 3,319 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி), நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் 79 ஆயிரத்து 842 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு உரிய பள்ளிகளுக்கு கடந்த மே 30ம் தேதி பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தந்த பள்ளிக ளுக்கு 25 சதவீத இடங்களுக்கேற்ப விண்ணப்பங்கள் வந்தால் அனைவ ருக்கும் சேர்க்கை ஆணை வழங்கப் படும். கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், அப்பள்ளிகளில் மே 31ம்தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில், 343 பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5,281 இடங்களுக்கு 3,319 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,621 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களது விண்ணப்பங்கள் உரிய பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், 133 பள்ளிகளில் சேர்வதற்காக உரிய ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததால் அப்பள்ளிகளில் நேற்று முன்தினம் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கைத் தேர்வு நடைபெற்றது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்கள், ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத் தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு குலுக்கல் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த சேர்க்கை குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் எல்.ஜி.செந்தில் கூறியதாவது:
கல்வியறிவு இல்லாத ஏழைகள் தங்களின் குழந்தைகளின் சேர்க்கையை இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்கிற முறையே தவறானது. ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கற்கும் பாரதம் அமைப்பினர் உள்ளனர். அவர்கள் மூலம் எளிமையாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்து இருக்கலாம். மேலும் வருவாய்த்துறையின் மூலம் தண்டோரா மூலமும் பொதுமக் களுக்கு இதனை தெரியபடுத்தியும் இருக்கலாம். இதையெல்லாம் விடுத்து இணையம் மூலம் விண் ணப்பம் பெறுவது என்பது ஏற்கதக் கதல்ல.
விழுப்புரம் மாவட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் 5,281 இடங்களுக்கு 3,319 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றால் இதன் உண்மை நிலை விளங்கும்.
மேலும் கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வசதியானவரின் குழந்தைகளை தனியார் பள்ளி களே பின் நின்று சேர்த்து கணக்கு காட்டியுள்ளது. தற்போது அளிக்கப் பட்ட சேர்க்கை பட்டியலின்படி குழந் தைகளின் பெற்றோர் பின்புலத்தை ஆய்வு செய்தாலே உண்மை வெளிவரும் என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், 343 பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5,281 இடங்களுக்கு 3,319 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,621 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களது விண்ணப்பங்கள் உரிய பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.