தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை - கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த காற்று மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான நிலோபர் புயல் வடக்கு குஜராத் - பாகிஸ்தான் இடையே நாளை கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.