தமிழகம்

அம்மா சந்தையில் பொருள் விற்க யாரை அணுகுவது? - சென்னை மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா வாரச் சந்தை’யில் என்னென்ன வகையான பொருட்களை வியாபாரிகள் விற்கலாம்? அவை எந்த துறையி்ன் கீழ் வருகின்றன? இந்த பொருட்களை விற்பதற்கு எந்த அதிகாரியை தொடர்பு கொண்டு அனுமதி பெறலாம் என்ற விவரங்களை அவர்களது செல்போன் எண்களுடன் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. அதுபற்றிய விவரம்:

தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகள் பங்கேற்கலாம்

சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் 7 இடங்களில் ‘அம்மா வாரச் சந்தை’ திறக்கப்பட உள்ளது. அதில் மொத்தம் 25 அரசுத் துறைகள் சார்பில் 200 கடைகள் திறக்கப்பட உள்ளன. அந்த சந்தையில் மலிவான விலையில் தரமாக விற்கப்பட உள்ள பொருட்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் இறுதி செய்துள்ளது.

இந்த சந்தையில், தமிழகத் தின் எந்த பகுதியை சேர்ந்த உற் பத்தியாளர்கள், வியாபாரிகளும் பங்கேற்று தங்கள் பொருட்களை விற்கலாம். அவ்வாறு பங்குபெற விரும்புவோர் யாரை அணுகி, உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT