தமிழகம்

ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

செய்திப்பிரிவு

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி. சரோஜா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் டி. சபாபதியிடம், காலை 11.40 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அவருடன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பி. தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆகியோர் இருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாளன்றே முதல் நாளில் தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்பட 6 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரான சரோஜா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிச. 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 9- ஆம் தேதி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வரும் 18-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். 20-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.

SCROLL FOR NEXT