தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், தேசிய அளவில் நடை பெறும் தகுதித் தேர்வுகளை எதிர் கொள்ள வசதியாக, பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பள்ளிக் கல்வியில் தரவரிசைப் பட்டியல் முறையை நீக்க வேண் டும் என்ற நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் திட்டம் இந்தியா வுக்கே வழிகாட்டியாக உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளது. ஒருசில ருக்கு மட்டும் செல்லாமல் இருக்கலாம்.
தேர்வு முடிவு வருவதற்கு முன்பே புதிய நடைமுறையை அறிவித்தால் மட்டுமே, மக் களிடம் வரவேற்பு இருக்கும் என்று கருதியதால் தேர்வுக்கு முதல் நாள் இந்த புதிய நடை முறை குறித்து அறிவிக்கப் பட்டது.
மாணவர்கள் மகிழ்ச்சி
இந்த புதிய நடைமுறையால் மாணவர்களும், பெற்றோ ரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் தொடர் பாக உயர்நிலைக் குழு பல்வேறு கருத்துகளைத் தெரி வித்துள்ளது. அதை செயல் படுத்துவது தொடர்பாக ஆலோ சித்து வருகிறோம்.
தமிழக கல்வித்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத்திட்டம் மாற்றி யமைக்கப்படும்.
பிரதமரின் துறை மூலமாகவே ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இயலும். ‘நீட்’ தேர்வில் கேள்விகள் மாற்றிக் கேட்கப்பட்டது குறித்து மத்திய அரசுதான் பதில் கூற வேண்டும் என்றார்.