தமிழகம்

6-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் ரூ.15 கோடி வருவாய் இழப்பு

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை யும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 114 படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்ற னர்.

உண்ணாவிரதம்

இப்போராட்டம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. இக்கோரிக்கை களை வலியுறுத்தி செப்டம்பர் 12 முதல் தங்கச்சிமடத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 5 ஆயிரம் தொழில்முறை மீனவர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் சார் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT