சசிகலா புஷ்பா எம்பியை ஆதரிக்க மாட்டோம் என்று அனைத்து நாடார்கள் கூட்ட மைப்பு அறிவித் துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கணேச நாடார் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சசிகலா புஷ்பாவின் அரசியல் விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அவர் தனக்கு பின்னால் எங்கள் சமூகம் உள்ளது என்று கூறியுள்ளார். இது ஆட்சேபனைக்கு உரியது.
அவரது சமீப கால செயல்பாடுகளால் எங்கள் சமூக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவரால், எங்கள் சமூகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாங்கள் அவருக்கு பின்னால் நிற்கமாட்டோம். அவரது கணவர் மற்றும் மகனை காவல்துறை நெருக்கத் தேவையில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களை தண்டிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.