தமிழகம்

மூடப்பட்ட மதுபான கடைகளை மீண்டும் திறக்க முயலும் அதிகாரிகள்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை வேறு இடங்களில் மீண்டும் திறப்பதற்காக நிபந்தனை களை பின்பற்றாமல் பாதுகாப்பற்ற கட்டிடங்களை தேர்வு செய்து வருவது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் முது நிலை மண்டல மேலாளர் ஆகி யோர் பதிலளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியை சேர்ந்த சக்திவேல் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக் கும் அதிகமாக மதுபானக் கடை கள் மூடப்பட்டன. இந்த கடை களை நிரந்தரமாக மூடாமல் பல கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின் றனர். மாவட்டத்தில் இயங்கிய 98 டாஸ்மாக் கடைகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல் பட்டு வந்த 77 கடைகள் மூடப் பட்டன. தற்போது மூடப்பட்ட கடை களை வேறு இடங்களில் மீண்டும் திறக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக அவசரம் அவசரமாக தரமற்ற, பாதுகாப்பற்ற கட்டிடங் களை மதுபானக் கடை வைப்ப தற்காக அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள் அருகில் அமைந் திருக்கக்கூடாது என்பன உட்பட பல் வேறு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெளி வாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு இடம் தேர்வு செய் யும்போது தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அதன் பிறகு அங்கு டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு வுக்கு தேனி மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை ஏப்ரல் 18 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு இடம் தேர்வு செய்ய தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

          
SCROLL FOR NEXT