தமிழகம்

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அமைச்சர் டெல்லி வருகிறார்

செய்திப்பிரிவு

தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய அரசின் அழைப்பை ஏற்று இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர இந்த மாத இறுதியில் டெல்லி வருகிறார்.

தமிழக - இலங்கை மீனவர் கள் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை டெல் லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், மீனவப் பிரதிநிதி கள் கலந்துகொண்டனர்.

இதில், இரு நாட்டு மீனவர் கள் இடையே நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை வலி யுறுத்தினர். இதைத் தொடர்ந்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சரை பேச்சுவார்த்தைக் காக டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தலை மையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பா ணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல் லைத்தீவு மீனவப் பிரநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

இலங்கை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளால் இலங் கையின் கடல்வாழ் உயி ரினங்கள் அழிந்து வருவதுடன், எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வடமாகாண மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகவும், இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த் தையை தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் மாத இறுதியில் டெல்லிக்கு செல்ல உள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT