தமிழகம்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: பொள்ளாச்சியில் 3 குழந்தைகள் அனுமதி

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச் சலின் பாதிப்பு இருப்பது கண் டறிப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி யைச் சேர்ந்த 7, 9, 14 வயதிலான சிறுவர், சிறுமிகள் கடந்த 3-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட் டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதிப்ப டுத் தப்பட்டது இதையடுத்து தற்போது அரசு மருத்துவமனை யில், டெங்கு சிறப்புப் பிரிவில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்கா ணிப்பாளர் கண்ணன் கூறும்போது, ‘‘அனுமதிக்கப்பட்ட சிறுவர், சிறுமி களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் கண்கா ணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT