‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தலைமையில் நீர் நிலைகளை தூய்மை படுத்தும் திட்டம் அவரது பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
தாம்பரம்- வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து இத்திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்கவிழாவில் கமல்ஹாசனின் திரையுலக நண்பர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
அன்று மாலை 3 மணியளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தின் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், நற்பணி இயக்கத்தின் நலத்திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்ள கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.