தமிழகம்

பாலியல் தொந்தரவால் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை - புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

பாலியல் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி புவனேஸ்வரி(25). புதுக்கோட்டை அருகே உள்ள ராயப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 2015 மே 7-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ஆசிரியை புவனேஸ்வரிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஊர்க் காவல் படையில் பணியாற்றி யவருமான புதுக்கோட்டை கவிநாடு மேற்கு பகுதியைச் சேர்ந்த கே.மதிவாணன்(45) பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதை யடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எ.லியாகத் அலி, குற்றம்சாட் டப்பட்ட கே.மதிவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT