கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் குறித்து அறிய சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீஸார் கர்நாடகாவுக்கு செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். கொலை மற்றும் எஸ்டேட்டில் நடந்த கொள்ளை குறித்து விசாரிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இது வரை 8 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். போலீஸாரால் தேடப் பட்ட கனகராஜ், விபத்தில் இறந்து விட்டார். மற்றொரு நபர் ஷயான், விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ் கரன் கூறும்போது, ‘‘குற்றத்தில் ஈடுபட்ட 11 பேரில், குட்டி என்பவரை மட்டும் கைது செய்ய வேண்டும். அவரை பிடிக்க தனிப்படையினர் கேரளா சென்றுள்ளனர். கோவை யில் சிகிச்சை பெற்று வரும் ஷயானிடம் விசாரணை நடத்த எஸ்பி முரளிரம்பா கோவை சென்றுள்ளார்’’ என்றார்.
இந்நிலையில், கோடநாடு பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மர்மம் இருப்பதால், இவற்றுக்கு சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டால்தான் விடை கிடைக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி முரளிரம்பா, உயர் அதிகாரிகளுக் கும் தெரிவித்துள்ளார். இவர்கள் விசாரணைக்கு அனுமதி வழங்கி யுள்ளதாகவும், இதன்பேரில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜை உடன் அழைத்துச் சென்று, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் சயானிடம் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான தனிப்படை போலீஸார் 3 மணி நேரம் விசாரித்தனர்.
விசாரணை முடிவில் எஸ்பி முரளிரம்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். சயான் மீது கேரள போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளதால், அவரை கைது செய்வது போன்ற நடவடிக்கை களுக்கு கேரள போலீஸாருடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
சயானின் தாயாரிடமும், சகோதரி யிடமும் மருத்துவச் செலவுகள் குறித்து பேசியுள்ளோம். சயானின் குடும்பத்தினர் திங்கள்கிழமை (இன்று) வருவதாகத் தெரிவித்துள் ளனர்’’ என்றார்.