தமிழகம்

கூட்டுறவு வங்கி பயிர்க் கடன் இலக்கு ரூ.5 ஆயிரம் கோடி

செய்திப்பிரிவு

மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2014-15 நிதியாண்டில் ரூ.5 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 2014-15 நிதியாண்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதில் ரூ.1000 கோடி கடனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT