தமிழகம்

பிப். 24-ம் தேதி கோவைக்கு வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வரும் 24-ம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத் தப்பட உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள் ளார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாறு காணாத வறட்சி ஏற்பட் டுள்ளதால் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, நிவாரண உதவி யாக ஓர் ஏக்கருக்கு ரூ.5,465 வழங்கு வதை ஏற்க இயலாது.

இதனுடன் காப்பீடு, இழப்பீடு தொகையையும் முன்பணமாக சேர்த்து ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் பெற்றுள்ள விவசாய கடன் கள் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். வறட்சியால் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும்.

காவிரி, பவானி, சிறுவாணி ஆறு களின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக, கேரள அரசுகளுக்குத் துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 24-ம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

          
SCROLL FOR NEXT