தமிழகம்

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை படிப்புகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் படிப்புகள் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பு களுக்கான தேர்வுகளின் முடிவுகள் 29-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும். தேர்வெழுதிய மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். www.ideunom.ac.in, www.unom.ac.in

மறு மதிப்பீட்டுக்கு, உரிய தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT