தமிழகம்

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.கிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட் டுள்ள தீர்ப்பு, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தீர்ப்புக் கான தேதி, செப்டம்பர் 20 சனிக்கிழமை என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்ட போது, தீர்ப்பு தேதியும் செப்டம்பர் 27-ம் தேதி சனிக் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சனிக்கிழமைக்கு பிறகு தொடர்ந்து விடுமுறை நாட்கள் உள்ளன என்பது தெரிந்தும் தீர்ப்பு தேதி இறுதி செய்யப்பட் டுள்ளது. இதில் ஏதோ உள் நோக்கம் இருப்பது உறுதியா கிறது.

மேலும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியும் மேல்முறையீடு குறித்து கருத்து ஏதும் கூறாமல் உள்ளார். எனவே, ஜெயலலிதாவை சிறையில் அடைத்திருப்பது நியா யமற்ற செயலாகும்.

இந்த வழக்கு நியாயமாக நடக்க, அவரை தமிழக சிறைக்கு மாற்றுவதோடு வழக்கையும் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT