தமிழகம்

குடியரசுத் தலைவரின் காஞ்சிபுரம் வருகை திடீர் ரத்து

செய்திப்பிரிவு

நாளை (மே 24) காஞ்சிபுரம் வருவதாக இருந்த குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய் யப்பட்டுள்ளது. அவர் வருகை குறித்து மறுதேதி எதுவும் அறி விக்கப்படவில்லை.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மே 24-ம் தேதி காஞ்சி புரம் வருவதாக இருந்தது. அவர் ராமானுஜரின் ஆயிரமாவது திருஅவதார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

மேலும் சங்கர மடம் சென்று மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் வேகமான நடைபெற்று வந்தது. அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பாதுகாப்பு அதி காரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹைதிமணி ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெறுவதாக இருந்த குடி யரசுத் தலைவரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. அவர் அந்த நேரத்தில் சில வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜனிடம் கேட்டபோது, ‘‘குடியரசுத் தலைவரின் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் எந்த தேதியில் வருவார் என்பது அறிவிக்கப்படவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT