தமிழகம்

அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் கொள்முதல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அதி​கரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடு​தலாக 2,000 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நடப்​பாண்டு கோடைக்​காலம் எதிர்​பா​ராத​வாறு நீடித்​த​தால் மின் தேவை​யும் அதி​கரித்​துள்​ளது. அதே​நேரம் காற்​றின் வேகம் குறைந்​த​தால் காற்​றாலை மின் உற்​பத்​தி​யும் எதிர்​பார்த்த அளவுக்கு கிடைக்​காத சூழல் ஏற்​பட்​டது. இதனால் சில நேரங்​களில் மின்​னழுத்த குறை​பாடு போன்ற தொழில்​நுட்ப பிரச்​சினை​கள் ஏற்​பட்​டன.

இதை கருத்​தில்​கொண்டு பல்​வேறு நிறு​வனங்​கள் மற்​றும் வெளிச்​சந்​தை​யில் இருந்து கூடு​தலாக 2 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்ய மின்​வாரி​யம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இதன்​மூலம் தற்​போது மின் தொகுப்​பின் நிலைமை சீராக உள்​ளது.

மின்​விநி​யோக பாதிப்​பு​களை உடனடி​யாக சரிசெய்ய சிறப்​புக் குழுக்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. இக்​குழுக்​கள் மூலம் மின் தடை ஏற்​பட்ட பகு​தி​களில் உடனே பணி​கள் மேற்​கொண்டு மின்​விநி​யோகம் சரிசெய்​யப்​பட்டு வரு​கிறது.

அதே​போல், பொது​மக்​கள் நலன்​கருதி வழக்​க​மான பராமரிப்​புப் பணி​களுக்​காக திட்​ட​மிடப்​பட்ட மின்​தடைகளை இயன்​றவரை தவிர்க்​க​வும் களப்​பணி​யாளர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பொது​மக்​களுக்கு நாள் முழு​வதும், குறிப்​பாக இரவு நேரங்​களில் சீரான மற்​றும் தடையற்ற மின்​விநி​யோகத்தை உறுதி செய்ய மின்​வாரி​யம் தொடர்ந்து விழிப்​புடன் செயல்​பட்டு வரு​கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT