தமிழகம்

சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரயில்கள் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐ.சி.எஃப்​-பில் தயா​ரிக்​கப்​பட்ட 2 அம்​ரித் பாரத் ரயில்​கள் தெற்கு ரயில்​வே​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களை தமி​ழ​கத்​துக்​குள் இயக்க பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

சென்னை ஐ.சி.எஃப்​-பில் தற்​போது வந்​தே​பாரத் ரயில், அம்​ரித் பாரத் ரயில் உள்​ளிட்ட ரயில் வகை​கள் தயா​ரிப்​பில் தீவிர கவனம் செலுத்​தப்​படு​கின்​றன. வந்​தே​பாரத்​துக்கு இணை​யான வேக​மும் பாது​காப்​பும் கொண்ட, அம்​ரித் பாரத் ரயில் ‘புஸ் புல்’ தொழில்​நுட்​பத்​தில் தயா​ரிக்​கப்​படு​கிறது. இந்த ரயி​லின் இரு​புற​மும் இன்​ஜின் கொண்டு இயக்​கப்​படு​வ​தால் மணிக்கு 130 கி.மீ. வேகத்​தில் செல்​லும். ஒரே நேரத்​தில் 1,834 பேர் பயணிக்​கும் வகை​யில் 12 முன்​ப​திவு பெட்​டிகள் உட்பட 22 எல்​.எச்​.பி. பெட்​டிகள் இருக்​கும்.

இந்​நிலை​யில், ஐ.சி.எஃப்​.-பில் சமீபத்​தில் தயா​ரிக்​கப்​பட்ட, 2 அம்​ரித் பாரத் ரயில்​கள் தெற்கு ரயில்​வேக்கு ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களை தமி​ழ​கத்​தின் தென்​மாவட்​டங்​களுக்​கும், கோவை வழித்​தடத்​தி​லும் இயக்க வேண்​டும் என்று பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனைக் குழு உறுப்​பினர் ஜாபர் அலி கூறிய​தாவது: நாடு முழு​வதும் தற்​போது, 30 வழித்​தடங்​களில், 60 அம்​ரித் பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. வந்​தே​பாரத் ரயிலுக்கு இணை​யான வேக​மும், வசதி​யுடன் இந்த வகை​யில் 2 புதிய ரயில்​கள் தெற்கு ரயில்​வே​யிடம் வழங்​கப்​பட்​டுள்​ளன.

12 முன்​ப​திவு பெட்​டிகள் கொண்ட இந்த ரயில்​களில், ‘ஏசி’ பெட்​டிகள் இருக்​காது. இதனால், சாதாரண முன்​ப​திவு கட்​ட​ணத்​தில், அதி​க​மான பயணி​கள் பயணிக்க முடி​யும். இந்த புதிய ரயில்​களை தமி​ழ​கத்​துக்​குள் இயக்க, ரயில்​வே​யிடம் பரிந்​துரை செய்​யப்​படும்.

மேலும், அம்​ரித் பாரத் வகை ரயில்​களில், கணிச​மான அளவுக்கு ‘ஏசி’ பெட்​டிகள் மற்​றும் கூடு​தல் வசதி​யுடன், மேம்​படுத்​தப்​பட்ட புதிய வகை பெட்​டிகள் ஐ.சி.எஃப்​.-பில் தயா​ரிக்​கப்​படு​கிறது. தரை, இருக்கை மற்​றும் படுக்கை ரெக்​சின், சிற்​றுண்டி மேசைகள், திரைச்​சீலை​கள் என பயணி​களை கவரும் வகை​யில் உள்​அலங்​கார​மும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த புதிய வகை ரயில்​களை​யும், விரை​வில் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டுவர ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT