ராஜி, ஐயனார்

 
தமிழகம்

செஞ்சி அருகே பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: செஞ்சி அருகே மின்னல் தாக்கியதில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயனார் (50). இவர் தையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமான நிலம் அதேபகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் நேற்று நாற்று எடுக்கும் பணி நடைபெற்றது. தையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜி (36) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிற்பகலில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வக உதவியாளர் ஐயனார் மற்றும் ராஜி ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.

அருகில் இருந்தவர்கள் இவரையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT