அண்ணாமலையார் கோயில் 
தமிழகம்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களை ஏமாற்றிய 2 இடைத்தரகர்கள் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களிடம் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பத்தினரிடம் 2 நபர்கள், விரைவு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், இடைத்தரகர்கள் போல செயல்பட்டு பக்தர்களிடம் பணம் பறித்த திருவண்ணாமலை வஉசி நகரை சேர்ந்த விஜயராஜ், சிவநாதன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT