தமிழகம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு

செய்திப்பிரிவு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் பெண் உட்பட 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

சென்னை கூடுவாஞ்சேரி பாரதியார் சாலையைச் சேர்ந்த பாஸ்கர், மீனாட்சி தம்பதி யரின் மகன் அன்பு (39). கடந்த 8-ம் தேதி அப்பகுதியில் சாலையை கடக்கும்போது வாகனம் மோதியதில் பலத்த காய மடைந்தார். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

எனவே, அன்புவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து டாக்டர் கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் அவ ரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வு கள் மற்றும் கண்விழிப் படலங்களை எடுத்தனர். கல் லீரலை டாக்டர் முகமது ரேலா குழுவினர், பஞ்சாப்பை சேர்ந்த 33 வயதுடைய வியாபாரிக்கு பொருத்தினர். ஒரு சிறுநீரகத்தை 22 வயதுடைய பெண்ணுக்கு டாக்டர் வெங்கட்ராமன் குழுவினர் பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத் துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயா ளிக்கு பொருத்தப்பட்டது. இதய வால்வுகள் மற்றும் கண் விழிப்படலங்கள் பின்னர் பயன்படுத்துவதற்காக ஸ்ரீராமச்சந் திரா மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT