உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவசர நேரங்களில் நோயாளி களை பத்திரமாக மீட்க வசதியாக அனைத்து அடுக்குமாடி மருத்துவ மனைகளிலும் சாய்வுதளப் பாதை வசதியை உடனடியாக அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஜவஹர்லால் சண்முகம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத் தில் உள்ள அனைத்து மருத் துவமனைகளிலும் சாய்வுதளப் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வு, ‘‘அனைத்து மருத்துவ மனைகளிலும் சாய்வுதளப் பாதை அமைப்பது குறித்து தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பித்து, அதை ஜூலை 12-ம் தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண் டும்’’ என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை 19-க்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில், உயர் நீதி மன்ற உத்தரவையடுத்து, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித் துள்ள உத்தரவு: அடுக்குமாடி மருத்துவமனைகளில் தீ விபத்து போன்ற அவசர காலங்களில் நோயாளிகளை எளிதாக மீட்கும் வகையில் சாய்வுதளப் பாதைகளை அமைக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, அனைத்து அடுக்குமாடி மருத்துவமனை களிலும் கண்டிப்பாக சாய்வுதளப் பாதை அமைக்க வேண்டும்.
மேலும் நோயாளிகளை எவ் வாறு மீட்பது என்பது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ மனை பணியாளர்கள், செவிலியர் களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்க வேண்டும். தீயணைப்புத் துறையினரின் வழிகாட்டுதல்படி வழிமுறைகளை அமைக்க வேண்டும்.
2007-க்குப் பிறகு கட்டப்பட்ட அனைத்து அடுக்குமாடி மருத்துவ மனைகளிலும் உடனடியாக இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளின் சுற்றுப் பாதைகளில் அவசர நேரங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். அடுக்குமாடி மருத்துவ மனைக ளின் கட்டிடம் விசாலமானதாக வும், காற்றோட்டமுள்ள ஜன்னல் கள் உடையதாகவும், நோயாளிகள் எளிதாக வெளியேறும் வகையிலும் இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளின் சுற்றுப் பாதைகளில் அவசர நேரங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். அடுக்குமாடி மருத்துவ மனைக ளின் கட்டிடம் விசாலமானதாக வும், காற்றோட்டமுள்ள ஜன்னல் கள் உடையதாகவும், நோயாளிகள் எளிதாக வெளியேறும் வகையிலும் இருக்க வேண்டும்.
அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள அவசரகால வழிகள் குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழில் நோயாளிகளுக்கு தெரியும் வண் ணம் அறிவிப்பு பலகைகளை கண்டிப்பாக வைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து ஜவ ஹர்லால் சண்முகம் கூறும்போது, ‘‘300 சதுரமீட்டர் பரப்பு கொண்ட ஒரு மருத்துவமனை தளத்தில் கண்டிப்பாக சாய்வுதளப்பாதை வசதி இருக்க வேண்டும் என விதிகள் உள்ளது. அதை சுட்டிக் காட்டிதான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது அரசு செயலர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, அனைத்து அடுக்கு மாடி மருத்துவமனைகளிலும் சாய்வுதளப் பாதை அமைக்கப் பட்டால் அவசர காலங்களில் உயிரிழப்பு தடுக்கப்படும். பெரும் பாலான அரசு, தனியார் மருத்துவ மனைகளில் இந்த வசதி இல்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு’’ என்றார்.