சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் உலக புத்தக தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங் களிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் உலக புத்தக தினம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
விழாவில் அமைச்சர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத் தாளர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர் கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதிநேர நூலகங்களில் உலக புத்தக தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பேச்சு, கதை சொல்லுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி கள், குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப் பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.