தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர கடற்கரை பகுதியில் உருவான மேல் அடுக்கு சுழற்சி அதே பகுதியில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி, கோவை மாவட்டம் வால்பாறையில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.