தமிழகம்

நாகப்பட்டினத்தில் ஆட்சியர் உத்தரவின்பேரில் பன்றிகளைப் பிடித்த இளைஞர் கொலை: 6 பேர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினத்தில் பன்றிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினத்தில் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை வரதராஜன்தெரு பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் ராஜா(37) என்பவர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மாலை அக் கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், டாடா நகர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்து சிறிய சரக்கு வண்டியில் ஏற்றிச்சென்றார். நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா அருகில் வந்துகொண்டு இருந்த போது சிலரால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த னர். முதல்கட்ட விசாரணையில் நாகப்பட்டினம் மருந்து கொத்தன் தெருவைச் சேர்ந்த சிலர் இக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை யடுத்து அதனை உறுதி செய்த போலீஸார் மருந்து கொத்தன் தெரு மாங்கொட்டைசாமி தெருவைச் சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக் (24) அவரது தம்பி மணிகண்டன் (23), சக்திவேல் மகன் பசுபதி (26), பக்கிரிசாமி மகன் தாமஸ் (26), முருகேசன், தஞ்சாவூர் ஷகில் மகன் தினேஷ் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கருணாகரன் என்பவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜாவின் உறவினர்கள், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நாகப் பட்டினம் தலைமை மருத்துவமனை முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி அன்பு, நகர காவல் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட போலீஸார், விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதிமொழியை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

மாநிலம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நாகை நகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உத்தரவிட்டதை அடுத்து நகராட்சி அதிகாரிகள் அதற்கான முயற்சிகளில் இறங்கினர். சுற்றித் திரியும் பன்றிகள் அனைத்தும் நாகை மருந்து கொத்தன் தெரு மற்றும் காட்டுநாயக்கன் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவை என்பதால் அப்பகுதியில் உள்ள நபர்களைத் தவிர்த்து மயிலாடு துறை பகுதியில் உள்ளவர்களை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

60 பன்றிகள் பிடிக்கப்பட்டன

கொல்லப்பட்ட மயிலாடுதுறை ராஜா, பன்றிகள் வளர்க்கும் தொழில் செய்து வந்தார். ராஜா, அவரது தம்பி முனுசாமி, ரங்கசாமி, பாபு, விஜி உள்ளிட்ட 10 பேர் 3 நாட்களாக நாகப்பட்டினம் பகுதி யில் பன்றிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 60 பன்றிகளை அவர்கள் பிடித்துவிட்ட நிலையில் மருந்து கொத்தன் தெரு, மாங்கொட்டைசாமி தெரு வைச் சேர்ந்த பன்றி வளர்ப்போர் ஒன்று திரண்டு வந்து, பன்றி களைப் பிடிக்கக் கூடாது என ராஜா குழுவினரிடம் எதிர்ப்பு தெரி வித்தனர். அரசு உத்தரவு எங்க ளிடம் உள்ளது என்று கூறி, ராஜா தரப்பினர் தொடர்ந்து பன்றி பிடிக் கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பன்றி வளர்ப்போர் ஒன்று திரண்டு சென்று புத்தூர் ரவுண்டானா அருகே பன்றிகளை ஏற்றிக்கொண்டு ராஜா வந்துகொண்டிருந்த சரக்கு வாகனத்தை மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். தப்பி ஓடிய ராஜாவை விரட்டிச் சென்று செல்லூர் அருகே சாலையில் வெட்டி கொன்றனர்.

கொல்லப்பட்ட ராஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மயிலாடு துறையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்பட்டவர். அதனால், மயிலாடு துறை பகுதிக்கு அதிகம் வராமல் நாகப்பட்டினம் பகுதியில் இருந் திருக்கிறார். அவருக்கு செல்வி (30) என்ற மனைவி, 14 வயது மகள், 7 மற்றும் 5 வயது மகன்கள் உள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் னர் நேற்று மாலை நாகையி லிருந்து எடுத்துவரப்பட்ட ராஜா வின் உடல், நேற்றிரவு 7.30 மணியளவில் மயிலாடுதுறைக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT