விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகே இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர் செல்வராஜ் 5 பேர் கொண்டு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
விழுப்புரம் திமுக நகர செயலாளராக பதவி வகித்தவர் சி . செல்வராஜ். இவர் இன்று காலை விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது 5பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு அரிவாளால் வெட்டிப்பட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு அக்கும்பல் தப்பியது.
இத்தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீஸார் செல்வராஜின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கொலை நடந்த இடத்தை டி ஐ ஜி அனிஷா உசேன், எஸ்.பி நரேந்திர நாயர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.