தமிழகம்

அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பஞ்சாப் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு, பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினரால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத் தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், அரக் கோணம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 27 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT