தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லகண்ணு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் விமலா தேவி, தலித் இளைஞரைக் காதலித்த காரணத் துக்காக தனது பெற்றோரால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சிலரும் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.