தமிழகம்

50-வது மாரத்தானில் பங்கேற்கவுள்ள மா.சுப்பிரமணியனுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

செய்திப்பிரிவு

தனது 50-வது மாரத்தான் போட்டி யில் பங்கேற்கவுள்ள முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிர மணியன், விளையாட்டுப் போட்டி களில் ஆர்வம் கொண்டவர். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி புதுச்சேரியில் நடந்த மாரத்தான் போட்டியில் முதல்முறையாக பங் கேற்றார். கொல்கத்தாவில் நேற்று நடந்த மாரத்தானில் பங்கேற்று 21 கி.மீ. தூரம் ஓடினார். இது அவரது 49-வது மாரத்தான் போட்டியாகும்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, மாரத் தானில் தனக்குள்ள ஆர்வத்தை விளக்கினார். புதுச்சேரியில் பிப்ர வரி 12-ம் தேதி நடக்கும் மாரத் தானில் பங்கேற்பதாகவும், அது தனது 50-வது மாரத்தான் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 50-வது மாரத்தான் போட்டியில் பங்கேற்கவுள்ள மா.சுப்பிரமணி யனுக்கு சச்சின் வாழ்த்து தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT