இளைஞர்களின் போராட்டக் கோரிக்கை சரியான வெளிச்சத்தில் காட்டுவோம் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பலராலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இப்போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், "தமிழகம் முழுவதும் அமைதியான போராட்டத்தின் காட்சிகள். ஒற்றுமை, அமைதி மற்றும் உறுதி நமது கோரிக்கையை சரியான வெளிச்சத்தில் காட்டுவோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.