தமிழகம்

தூத்துக்குடி ரவுடி பட்டுராஜ் வெடிகுண்டு வீசி கொலை: கொலையாளியைப் பிடிக்க தனிப் படை

செய்திப்பிரிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி பட்டுராஜ் சாயல்குடி அருகே மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப் பட்டார்.

தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பட்டு என்ற பட்டுராஜ் (47). தூத்துக்குடி நகரில் பிரபல ரவுடியாக வலம்வந்த இவர் எதிரிகளுக்கும், போலீஸாருக்கும் பயந்து கடந்த 5 ஆண்டுகளாக மனைவியுடன் ராமநாதபுரம் மாவட் டம், சாயல்குடி அருகே கன்னி ராஜபுரம் கிராமத்தில் தலைமறை வாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் கன்னிராஜபுரம் காமராஜர் சிலை அருகே பட்டுராஜ் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பட்டுராஜ் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் நிலைகுலைந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

உயர் அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, சிக்கல் இன்ஸ்பெக்டர் குமரன், சாயல்குடி

சப்-இன்ஸ்பெக்டர் சிலை மணி ஆகியோர் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டுராஜ் உடலை சாயல்குடி போலீஸார் கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ரவுடி பட்டுராஜுக்கு தூத்துக்குடி நகர் தெற்கு, வடக்கு, தாளமுத்து நகர் காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசிய வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 15 வழக்கு கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:

பட்டுராஜ் மீது தூத்துக்குடியில் காக்காமண்டையன் கொலை வழக்கு உள்ளிட்ட 15 வழக்கு கள் உள்ளன. பட்டுராஜ் கொலை யில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தலைமையில் தனிப் படை அமைக்கப் பட்டுள்ளது காக்கா மண்டையனின் ஆதர வாளர்கள் பட்டுராஜை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT