தமிழகம்

இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 30 பேர் விடுதலை

செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 30 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களில் 77 தமிழக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற் ப டையினர் சிறைபிடித்தனர். இவர் கள் யாழ்ப்பாணம், வவுனியா, நீர் கொழும்பு சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

இதனிடையே இலங்கை சிறை களில் உள்ள மீனவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கைப்பற்றப் பட்ட 103 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல் புதுக்கோட்டை மீனவர்களும், கடந்த 22-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஜுலை 14-ம் தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 73 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகளை அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை ஆகிய நீதிமன்றங் களில் 43 தமிழக மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மன்னார், கல்பிட் டி நீதிமன்றங்களில் 30 மீனவர் கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கடந்த 15-ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 4 ராமேசுவரம் விசைப்படகு மீனவர் களையும் விடுதலை செய்ய வலி யுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச் சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT