உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டி யிடும் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முரளிதர ராவ் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப் புக்கு ஏற்ப எங்களால் செயல்பட முடியவில்லை. இருந்தபோதும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் நாங்கள் உள்ளோம்.
உள்ளாட்சித் தேர்லில் தனித்துப் போட்டியிட உள்ளோம். உள் ளாட்சித் தேர்தலை எதிர்கொள் வது குறித்து சென்னையில் ஜுலை முதல் வாரத்தில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவோம். இத்தேர்தலில் தனித் துப் போட்டியிடுவதன் மூலம் கட்சி வலுப்பெறும் என்றார்.
முன்னதாக செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட இருக்கிறது. தமிழகத் தில் மக்களுக்காகப் போராடும் கட்சி பாஜக மட்டும்தான். மக்களுக்கு நல்லது செய்ய இந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். உள்ளாட்சித் தேர் தலில் திட்டமிட்டு முதலிலேயே பணியாற்றினால் வெற்றி எளிது என்றார்.