தமிழகத்தில் நடக்கும் இயற்கை வள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை சுற்றுவட்டாரப் பகுதி களில் நடந்துள்ள கிரானைட் முறை கேடுகள் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ.சகாயம் தலைமையில் உயர் நீதிமன்றத் தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், கிரானைட் முறைகேடு களால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதாகக் கூறியுள்ளது.
இதில், உயர்நிலை அலுவலர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அரசியல் செல்வாக்கு உள்ளோர் லாபம் அடைந்திருக்கின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் மீதும் குற்றம்சாட்டிருப்பதால் கிரானைட் தொடர்பான வழக்கு களை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளி லும் நடைபெற்றுள்ள மணல், தாது மணல், கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறை ஒருங் கிணைத்து விசாரிக்க வேண்டும்.