தமிழகம்

சென்னை- குமரி இரட்டை ரயில் பாதை பணி: தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை- தெற்கு ரயில்வே பொது மேலாளர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை- கன்னியாகுமரி இடை யேயான இரட்டை அகல ரயில் பாதைப் பணிகளுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவைப்படு கிறது என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட வசிஸ்ட ஜோரி, அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனுக் காக பொன்மலை பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட 500-வது டீசல் இன்ஜினையும், தனியாருக்காக தயாரிக்கப்பட்ட 45 வேகன்களை யும் கொடியசைத்து அவர் வழி யனுப்பிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், பொன்மலை பணிமனை மேலாளர் சுரேஷ் மற்றும் ரயில்வே அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் வசிஸ்ட ஜோரி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சென்னை- கன்னியாகுமரி இடை யேயான இரட்டை அகல ரயில் பாதை பணிகளுக்கு தமிழக அர சின் ஒத்துழைப்பு தேவைப்படு கிறது. விரைவில் இந்தப் பணி களை முடிக்கும் வகையில், தமிழக அரசிடம் பேசி வருகிறோம்.

ரயில்வேயில் ஆள்பற்றாக் குறை காரணமாக எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைதான் என்றார்.

SCROLL FOR NEXT