தமிழகம்

மதுரையில் 5 மாதங்களுக்கும் மேலாக அரசு விருது பெற காத்திருக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்

செய்திப்பிரிவு

அரசால் கிராமிய விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக விருதுக்காகக் காத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட நாட் டுப்புற கலைகளை ஆடும் கலை ஞர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். முன்னர் அதிகளவில் இருந்த கலைஞர்களின் எண் ணிக்கை போதிய அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இந்தக் கலைகளை பாதுகாக்கவும், கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டுப்புறக் கலை களில் சிறந்து விளங்குப வர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என வயதுக்கேற்ப விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு விருதுக்கு தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக விருது வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அரசின் அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என நாட்டுப்புறக் கலைஞர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் பதிவில் கூறியது: தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் கலை பண்பாட்டு மையம், கலை துறை, சுற்றுலாத் துறை, தமிழ்நாடு இயல், இசை, நாடகம் ஆகிய துறைகள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராமிய விருது அறிவிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக விருது வழங் கப்படாமல் உள்ளதால், ஒவ் வொரு பிரிவிலும் ஒருவர் என 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து மொத்தம் 20 பேர் தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டோருக்கான கடிதம் அனுப் பப்பட்டது. தேர் தல் நடைபெற்றதால் விருது வழங்கப் படவில்லை. தற்போதும் அதிமுக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் விருது இன்னும் வழங்கப் படவில்லை. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களையே மறந்துவிட்டனர். இதேபோல 2010-11, 2011-12-ம் ஆண்டுகளில் கிராமிய விருது அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. பின் னர் அவசர, அவசரமாக கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது தகு தியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டும் 6 மாதங்களுக்கும் மேலாக விருது வழங்கப்படாமல் உள்ளது. இதற்கென அதிக செலவுகள் கிடையாது. இந்த விருது பெற்றால் மட்டுமே மாநில அளவிலான கலைமாமணி விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். கலைமாமணி விருதும் கடந்த 6 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் நாட்டுப்புறக் கலைகளை நம்பித் தான் உள்ளனர். ஆனால், விருதுகள் வழங்கப்படாத காரணத்தால் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உடனடியாக விருது வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக மதுரை மண்டல கலை, பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் (பொ) இரா. குணசேகரன் கூறியதாவது: விழா நடத்தி கலைஞர்கள் அனைவருக்கும் விரைவில் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT