மாநிலம் முழுவதும் 600 கிராம பஞ்சாயத்துகளில் ரூ. 22,227 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் இருக்கின்றன என சட்டமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இருப்பிணும், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கும் நிதி நிலைமையை பொருத்து திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது, பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.