போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராயப்பா மற்றும் இருதயராஜ். சகோதரர்களான இவர்களுக்கு பேரம்பாக்கத்தில் 8 ஏக்கர் 61 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை நான்சிபாட்டியா, விஜயா ஆகியோரிடமிருந்து கிரயம் பெற்று தங்கள் பெயரில் பட்டா வாங்கி அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சொத்தை பொன்னேரி அடுத்த சின்னவேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், ரவி, உஷா ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்தனர். அதன் மதிப்பு ரூ.5 கோடி. இதுகுறித்து, ராயப்பா மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக் குப் பதிவு செய்த போலீஸார் நிலத்தை அபகரித்த புருஷோத் தமனை கைது செய்தனர்.