தமிழகம்

ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேருவது எப்படி? - பல்கலை. அதிகாரிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு படிப்பது தொடர்பான ஒருநாள் வழிகாட்டி கல்விக் கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று நடந்தது.

ஐடிபி கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்னெகி மெலன் பல்கலைக்கழகம், சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகம், மெல்போன் தேசிய பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், அடிலாய்டு பல்கலைக்கழகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டன.

இப்பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் தங்கள் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை நடைமுறை, கல்விக்கட்டணம், கல்வி உதவித்தொகை குறித்து கண்காட்சிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். மாணவர்களும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகளுடன் நேரில் கலந்துரையாடினர்.

தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரி ஜான் போனர் கண்காட்சியைப் பார்வை யிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த கல்விக் கண்காட்சியை ஏறத்தாழ 500 மாணவ-மாணவிகள் பார்வையிட்டதாக ஐடிபி இந்தியா கல்வி நிறுவன இயக்குநர் பையூஸ் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT