தமிழகம்

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 944க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, உள்ளூரில் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 944க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 743க்கு விற்கப்பட்டது.

இதுவே, வியாழக்கிழமை ரூ.2 ஆயிரத்து 732க்கு விற்கப்பட்டது. கடந்த ஒரு மாதம் பிறகு தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT