கடலூரில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக கலவரத்தில் தமிழர் களின் உடைமைகள் ரூ.100 கோடி அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக அரசு இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்துக்கு மத்திய, கர்நாடக, தமிழக அரசுகளின் மெத் தனப்போக்கே காரணம். மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். கர்நாடக, தமிழக முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் உமாபாரதி, சதானந்த கவுடாவின் பேச்சு கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது. பிரதமர் மோடி அவர்களை கண்டிக்க வேண்டும். அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வணி கர் சங்கங்கள் சார்பில் 16-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமாகா பங்கேற்கும் என்றார்.