தமிழகம்

மெரினா கடலில் அலையில் சிக்கி 3 பேர் பலி

செய்திப்பிரிவு

மெரினா கடலில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் அங்கித்(20). ஒரு தனியார் நிறுவ னத்தின் கணக்கு தணிக்கை பணிக்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். ஞாயிற்றுக்கிழமை சக பணியாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் இறங்கி விளையாடினார். அப்போது அலையில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திரகுமார்(22). இவர் சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று மாலையில் நண்பர்களுடன் வந்து கடலில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு செல்லவே, கடலுக்குள் மூழ்கி விட்டார்.

சென்னை அருகே கூடுவாஞ் சேரியை சேர்ந்தவர் சுதர்சன்(17). பிளஸ் 2 படித்து வந்தார். இவர் குடும்பத்துடன் நேற்று மாலையில் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

மெரினா கடலில் இறங்கி அனைவரும் விளையாடிக் கொண் டிருந்தபோது பெரிய அலையில் சிக்கிய சுதர்சன், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

டெல்லியை சேர்ந்த அங்கித், ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரகுமார் ஆகியோரின் உடல்கள் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கி விட்டன. அவற்றை அண்ணா சதுக்கம் போலீஸார் மீட்டு, பிரேத பரிசோனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுதர்சனின் உடலை தேடும் பணி நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது.

SCROLL FOR NEXT