தமிழகம்

போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டதாகத் தகவல்

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைய தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

போயஸ் தோட்ட இல்லத்தின் வாயிலருகே தீபா தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவும் அவரது ஆதரவாளர்களும் பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் புரிந்ததாகவும் தெரிகிறது.

தீபா கணவர் மாதவனும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.

இது குறித்து தீபா கூறும்போது, “என் சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் கார்டன் வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய தீபக்தான் அழைத்தார். என்னையும் என் கணவரையும் பாதுகாவலர்கள் தாக்கினர், செய்தியாளர்களையும் தாக்கினர். நாங்கள் தப்பித்து வெளிவர காரணமே செய்தியாளர்கள்தான்.

ஆனால் தீபக், ‘தீபாவை யாரும் தடுக்கவில்லை’ என்று கூறியதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

தினகரன் தரப்பினர்தான் தீபாவை உள்ள விடாமல் தடுத்ததாக தீபா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

SCROLL FOR NEXT