தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுமையாக இடிக்க 3 நாட்கள் ஆகும்: தீயணைப்புத் துறை துணை இயக்குநர் தகவல்

சுனிதா சேகர்

தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுமையாக இடிக்க 3 நாட்கள் ஆகும் என தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தெரிவித்தார்.

கடந்த மே 31-ம் தேதி சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் தீபிடித்தது. தீ மளமளவென பரவி ஒட்டுமொத்த கட்டிடமும் எரிந்து நாசமானது. ரூ.80 கோடி மதிப்பிலான ஜவுளி வகைகள் எரிந்து நாசமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதி இடிந்த நிலையில் இருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுமையாக இடிக்க 3 நாட்கள் ஆகும் என தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது 8 முதல் 5 நபர்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தை இடிக்கும் பணி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. முழுமையாக கட்டிடத்தை இடிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகும். கட்டிடத்தை இடிக்கும்போது பறக்கும் தூசுகளை தவிர்ப்பதற்காக தண்ணீர் பீய்த்து அடிக்கப்படுகிறது" என்றார்.

SCROLL FOR NEXT