தமிழகம்

காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து இரு மாநில நிலவரத்தை அறிய குழு: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து, இரு மாநிலத்திலும் உண்மை நிலவரம் அறிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.

கர்நாடகா மாநில மேலவை எதிர்க்கட்சி தலைவரும், அம் மாநில முன்னாள் துணை முதல்வ ருமான ஈஸ்வரப்பா நேற்று காலை மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழர்களும், கன்னடர்களும் எப்போதும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். கர்நாடகாவில் தற்போது குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ளது. இச்சூழலில் காவிரியில் எப்படி தண்ணீர் திறக்க முடியும்? உண்மை நிலவரம் தெரியாமல் உச்ச நீதிமன்றம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக அனைத்துக் கட்சியின் முடி வின்படி, நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் தண்ணீர் இல் லாத சூழலில் தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட் கின்றனர். அங்கு குடிக்க தண் ணீர் இல்லாத பயத்தால் போராட் டம் செய்கின்றனர். இரு மாநிலங் களின் உண்மை நிலவரம் ஆராய ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப் புக்கு பிறகு, தமிழகத்துடன் பேச்சு நடத்த தேவையில்லை என்றார்.

பின்னர், மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

          
SCROLL FOR NEXT