தமிழகம்

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 22 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது

செய்திப்பிரிவு

சிறப்பாக பணியாற்றிய தமிழ கத்தை சேர்ந்த 22 போலீஸ் அதிகாரி களுக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்பட உள்ளன.

அனைத்திந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் துறையினருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் குடியரசு தலைவரின் விருது வழங்கப் படும். சம்பந்தப்பட்டவர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவரின் விருது தமிழ கத்தை சேர்ந்த 22 போலீஸ் அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுக்கு மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.கார்த்தி கேயன், தஞ்சாவூர் சிறப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வி.வீராசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுகள் திருச்சி உதவி ஆணையர் யு.மாணிக்க வேல், சென்னை உதவி ஆணையர் என்.குமார், சென்னை காவல் துணை கண்காணிப்பாளர் பி.லோக நாதன், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர் சி.பாரதி, கிருஷ்ணகிரி துணை கண்காணிப் பாளர் பி.கண்ணன், விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் வி.எழிலரசி, சென்னை சிறப்பு பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் கே.என்.சுதர்சன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இன்ஸ்பெக்டர் ஜே.விஜய் ஆனந்த், கோவை இன்ஸ்பெக்டர் என்.பிரேமானந்தன், தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஆர்.ரகுபதி, எழும்பூர் மோட்டார் வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், கோவை ஆயுதப்படை இன்ஸ்பெக் டர் எம்.ரவிச்சந்தர், சென்னை தொழில் நுட்ப பிரிவு தேவகுமார், சேலம் எஸ்ஐ ஏ.ராஜா, தஞ்சாவூர் சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.ரத்தினம், சென்னை உதவி ஆய் வாளர் ஜே.கோபிநாதன், திருநெல் வேலி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜி.கலை வாணன், தஞ்சாவூர் சிறப்பு உதவி ஆய்வாளர் என்.கங்காதரன் மற்றும் ரத்தினசாமி, சென்னை குற்ற ஆவண காப்பக சிறப்பு உதவி ஆய்வாளர் இ.கங்கன்னா ஆகிய 20 பேருக்கு வழங்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT