சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 1-வது கண் காணிப்பு கோபுரம் அருகில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்டிருந்த பொட்டலம் ஒன்று கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது சிறிய வகை பேப்பர் மற்றும் பெரிய வடிவிலான பாகிஸ்தான் துணிக் கொடிகள் இருப்பது தெரியவந்தது. செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடி கண்டெடுக்கப்பட்டது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புழல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறைக்குள் கலவரத்தை ஏற் படுத்த யாரேனும் சதி செய்கிறார் களா என்ற கோணத்தில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறை காவலர்களுக்கு தொடர்பு இருக்குமா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.